Recipe Name: பரோட்டா
Recipe by: V. Subhasree
Ingredients:
மைதா 2 கப். சர்க்கரை 2 டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. பால் 25 மில்லி. சமையல் எண்ணெய் 50 மில்லி
Procedure:
மைதா பால் உப்பு சர்க்கரை இவற்றை ஒன்றாக கலந்து ஒன்றாக கொள்ளவும். பின் சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
மேலும் அழுத்தம் கொடுத்து மூன்று நிமிடங்கள் நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.
இந்த மாவை 4 மணிநேரம் ஊறவைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் கொண்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
சிறிய உருண்டைகளை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து மிகவும் மெல்லியதாக தேய்த்து அதை துணி சுருட்டுவது போல வட்டமாகச் ௬ருட்டி எடுக்கவும்.
உருட்டிய உருண்டைகளை மேல் சிறிது எண்ணெயைத் தடவி பரபரப்பு இல்லாமல் வைக்கவும்.
போட்டு பின் சுருட்டி வைத்த இந்த புரோட்டா உருண்டைகளை எடுத்து உள்ளங்கையில் மெதுவாக தட்டி பின் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும் எடுக்கவும்.
சுட்டு எடுத்த பரோட்டாக்களை ஒரு தட்டில் வைத்து ரோல் செய்து உள்ளங்கையில் குத்தி எடுத்தாள் மிகவும் அடுக்கடுக்காக ரேகைகள் உடன் சாப்பிட தயாராகிவிடும். இறுதியில் பரிமாறும் தட்டில் போட்டோக்களை வைத்து குருமாவை ஊற்றி சாப்பிட தயார்.
Total Votes: 1
Total Views: 1124