Recipe Name: திருப்பதி வடை
Recipe by: G.Umarani
Ingredients:
கருப்பு உளுந்து 100gram, பச்சரிசிமாவு 2ஸ்பூன், மிளகு தூள் 1ஸ்பூன், தேவையான உப்பு
Procedure:
கருப்பு உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதை மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் உப்பு மிளகுதூள் (கொரகொரப்பாக) பச்சரிசிமாவு இவை எல்லாம் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு சிறிய உருண்டையாக எடுத்துக்கொண்டு பட்டர் பேப்பரில் சன்னமாக தட்டி அதை எண்ணையில் பொறித்து எடுக்கவும். கரகரப்பான சுவையான திருப்பதி வடை தயார். திருப்பதியில் காசு கொடுத்தாலும் வாங்கமுடியாத இந்த வடையை நாமே விரும்பும் போது செய்து உண்ணலாம்.
கருப்பு உளுந்தின் பயன்:
கருப்பு உளுந்தின் தோல் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. பெண்கள் கருப்பைக்கு வலுவூட்டக்கூடியது எலும்புக்கு நல்லது.
Total Votes: 3
Total Views: 1592