Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கொட்டு தோசை, தெல்லகெட மிரியம்
Recipe by: K A V I T H A
Ingredients:
கொட்டு தோசை; தேவையான பொருட்கள்: தோசை மாவுக்கான பச்சரிசி - 2 கப், கஞ்சிக்கான பச்சரிசி - 1/2 கப், உப்பு - தேவைக்கேற்ப, சக்கரை - 1/2 டீ ஸ்பூன், தயிர் - 2 டேபிள் ஸ்பூன், தெல்லகெட மிரியம் 🧄🌶️ தேவையான பொருட்கள் : பூண்டு - 1/2 கப், வரமிளகாய் - 5 கப், எலுமிச்சை பழம் - 1 , உப்பு - தேவையான அளவு, தாளிப்பு: நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், கடுகு, க. இலை- தாளிக்க.
Procedure:
செய்முறை: ▶️தோசைக்கான பச்சரிசியை 1 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். ▶️கஞ்சிக்கான பச்சரிசியை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும், பின்பு தண்ணிர் வடித்து அரிசியை ரவை பதத்திற்கு உடைக்கவும். ▶️ ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு பிறகு அந்த ரவை அரிசியை போட்டு கஞ்சி பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும். ▶️ பிறகு நன்கு ஆற வைக்கவும். ▶️தோசைக்கான பச்சரிசியை நன்கு கெட்டியாக உப்பு சேர்த்து அரைக்கவும். ▶️ஆறவைத்த கஞ்சி, தயிர் இவற்றை மாவுடன் கெட்டியாக கலந்து வைக்கவும். ▶️ இந்த மாவை 8 மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கவும். ▶️ தோசை ஊற்றும் முன் சிறிது சக்கரை சேர்த்து தடிப்பமாக ஊற்றவும். தெல்லகெட மிரியம் 🧄🌶️ செய்முறை: பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து மைய அரைக்கவும். இதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தாளிப்பு சேர்த்து கலக்கவும். 🧄🌶️🧄🌶️🧄🌶️🧄🌶️ சுவையான கொட்டு தோசையும்,தெல்லகெட மிரியமும் தயார்
Total Votes: 6

Total Views: 1687