Recipe Name: பேசல பப்பு சராசலு....
Recipe by: Lakshmi Shankar
Ingredients:
பாசிப்பருப்பு 1 கப் ( ஒரு மணி நேரம் ஊறவைத்து ), தாளிக்க : எண்ணெய் 5 tsp, நெய் 2 tsp, கடுகு தேவைக்கேற்ப , உளுத்தம் பருப்பு 1 tsp, கடலை பருப்பு 1 tsp, முந்திரி - 10 nos, பச்சை மிளகாய் பேஸ்ட் , தேங்காய் துருவல் , லெமன் - 2 Nos, உப்பு தேவைகேற்ப
Procedure:
பாசிப்பருப்பை இரண்டு மணிநேரம் ஊற வைத்து நைசாக, கெட்டியாக அரைக்கவும் , இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்த மாவை அதில் ஊற்றி 20 நிமிடம் வேக வைத்து எடுத்து சூடாக , சேவை மெஷினில் போட்டு பிழிந்து எடுக்கவும். ஒரு 10 நிமிடம் ஆற வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் கடுகு உளுந்து தாளித்து தேவைக்கேற்ப பச்ச மிளகாய் பேஸ்ட் தேங்காய் துருவல், மற்றும் முந்திரி போட்டு அதை ஆற வைத்த பாசிப்பருப்பு சேவையில் கலந்து, கடைசியில் உப்பு மற்றும் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலக்கவும் .... !அருமையான பாசிப்பருப்பு சேவை ரெடி... அதே பிழிந்து வைத்த சேவையில் சிறிது எடுத்து தேவைக்கு ஏற்ப சர்க்கரை, ஏலக்காய் தூள், நெய் தாளித்த முந்திரி, தேங்காய் துருவல் போட்டு கலக்கினால் சுவையான இனிப்பு பேசல பப்பு சராசலு தயார்... மறந்து போன பழங்கால சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று.
Total Votes: 33
Total Views: 1214