Recipe Name: அரகஞ்சட்டி பில்ல ( Araganchatti billa )
Recipe by: Vijayalakshmi Muniyappan
Ingredients:
1. புழுங்கல் அரிசி ஒரு டம்ளர் 2. துவரம்பருப்பு அரை டம்ளர் 3.வெள்ளை உளுந்தம்பருப்பு -3 ஸ்பூன் தேங்காய் - 1.5 கப் வரமிளகாய் - 10 பெருங்காயம் - தேவைக்கு ஏற்ப உப்பு - தேவைக்கு ஏற்ப எண்ணெய்-தேவைக்கு ஏற்ப நெய் - தேவைக்கு ஏற்ப
Procedure:
அரிசியை தனியாக ஊற வைக்கவும் . பருப்புகள் இரண்டையும் தனியாக ஊற வைக்கவும்.
அரிசியுடன் தேங்காய் வரமிளகாய் பெருங்காயம் உப்பு போட்டு குருணை யாக ஆட்டி எடுக்கவும்.
பருப்புகள் இரண்டையும் நைசாக ஆட்டி எடுத்து மாவுகள் இரண்டையும் ஒன்றாக கலக்கி வைக்கவும் .
அடுப்பில் பித்தளை குண்டாவை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை அடை போல் ஊற்றி அதன் மேல் ஒரு தட்டை வைத்து மூடவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு நெய் ஊற்றி நன்கு காய்ந்தபின் அதை எடுத்துப் பரிமாறவும்.
உளுத்தம்பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை உளுந்தம் பருப்பு - கால் கப்
2.வர மிளகாய் - 8
துருவிய தேங்காய் - கால் கப் பெருங்காயம் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
புலி - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
மேற்கூறிய பொருட்கள் எல்லாம் வறுத்து மிக்ஸியில் போட்டு சட்னிபோல் அரைத்து எடுக்கவும் .
Total Votes: 123
Total Views: 4540