Recipe Name: பப்புரொட்டை
Recipe by: Sweda priya
Ingredients:
செய்து பாருங்கள் சுவையாக இருக்கும் தேவையான பொருட்கள்: மாவரைக்க: புழுங்கல் அரிசி - 2 கப் பச்சை அரிசி - 2 கப் தேங்காய் துருவல் - 2 தேங்காய் அளவு தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், துவரம் பருப்பு வேகவைத்து - 1/2 கப்,புளி கரைசல் இட்லி பொடி, மஞ்சள் தூள், வெல்லம், நெய், முந்திரி வருத்தது.
Procedure:
செய்முறை:
மாவுக்கு:
புழுங்கல் அரிசி, பச்சை அரிசி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
தோசை:
தோசை கல் காய்ந்ததும் எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றவும் ஒரு பக்கம் வெந்த பின் எடுக்கவும்
அந்த தோசையை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.கழுவிய தண்ணீரில் கஞ்சி காஞ்சி கொள்ளவும்
பருப்பு பப்புரொட்ட தாளிக்க: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து,
பின் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொன்டு அதை சேர்த்து வதக்கவும், அதில் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தோசையை சேர்த்து எலுமிச்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.
புளி பப்புரொட்ட: கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை தாளித்து புளி கரைசல் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் பின் வெட்டி வெய்த்த தோசையை சேர்த்து இட்லி பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இனிப்பு பப்புரொட்ட:
கடாயில் வெல்லம் சேர்த்து தண்ணீரில் கரைத்து கொள்ளவும் பின் நறுக்கிய தோசையை சேர்த்து தேங்காய் துருவல் தூவி, நெய், முந்திரி பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
Total Votes: 36
Total Views: 1306