Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கோதுமை இட்லி & பூண்டு மிரியம்
Recipe by: Anitha Kumaran
Ingredients:
கோதுமை இட்லிக்கு : முழு கோதுமை - 1 டம்ளர், துவரம் பருப்பு - 1 டம்ளர், இட்லி அரிசி - 2 டம்ளர், உப்பு - தேவையான அளவு. பூண்டு மிரியதிற்கு : பூண்டு - 30 பல், சிகப்பு மிளகாய் - 10, புளி(தண்ணிரில் ஊறவைக்கவும்) - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
Procedure:
கோதுமை இட்லிக்கு :  அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.  முழு கோதுமையை ஊற வைக்க கூடாது.  மாவு அரைக்கும் பொழுது முதலில் கோதுமையை கழுவி இரண்டு நிமிடம் மட்டும் அரைக்கவும்.  பிறகு ஊரவைத்துள்ள அரிசியையும் பருப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.  தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.  மாவு தயார்.  மறுநாள் மாவில் நல்லெண்ணெய் கலந்து பெரிய தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.  கோதுமை இட்லி தயார். பூண்டு மிரியதிற்கு :  முதல் நாள் இரவே பூண்டு, சிகப்பு மிளகாய், ஊறவைத்த புளி, உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.  மறுநாள் காலையில் அதில் கடுகு தாளிக்கவும் எண்ணெய் சிறிது அதிகமாக இருக்க வேண்டும்.  பூண்டு மிரியம் தயார்.  இரண்டு வாரங்கள் ஆனாலும் நன்றாக இருக்கும்.
Total Votes: 39

Total Views: 1022