
Recipe Name: கவ்வலு உப்புமா (kavvalluUpma)
Recipe by: Dharshini
Ingredients:
அரிசி மாவு ஒரு டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர்.உப்பு தேவையான அளவு.
Procedure:
ஒரு வாணலியில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு 2 டீஸ்பூன் எண்ணெய் போட்டு நன்றாக கொதிக்க விடவும். கொதித்தபின் அளந்து வைத்த மாவை அதில் போட்டு நன்றாக கலந்து மூடி வைக்கவும். மாவு சிறிது சூடாக இருக்கும் போது லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து எண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக பிசைந்து வைக்கவும். சோலி செய்ய ஆச்சு பலகையை எடுத்து மாவை நன்றாக நீளமாக உருட்டி சிறு சிறு துண்டுகளாக போட்டு அந்த சின்ன சிறு துண்டுகளை அந்த அச்சில் வைத்து அதில் லேசாக அமைத்து எடுக்கவும். நான் செய்த சோழிகளை இட்லி தட்டில் வைத்து நன்றாக வேக வைக்கவும்.
நன்றாக ஆறியதும் காரத்திற்கு துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து. வணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து வெந்த துவரம் பருப்பை சேர்த்து சிறிது உப்பு போட்டு வெந்த சோழிகளை அதனுடன் சேர்த்து கலந்து விட்டு பின் கடைசியில் எலுமிச்சை பழம் பிழிந்து இறக்கவும்.
இனிப்பு செய்ய தேவையானவை தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், 1 - டேபிள் ஸ்பூன் வெள்ளரிவிதை, 1 - டேபிள்ஸ்பூன் கசகசா, 1 -டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை, இது அத்தனையும் பால் ஊற்றி அரைத்து வாணலியில் போட்டு சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதனுடன் தனியாக வைத்துள்ள சோழிகளை கலந்து இறக்கவும். இந்த அட்சி இல்லை எனில் சீப்பை வைத்து அதில் அச்சு எடுத்து இதே மாதிரி செய்யவும். குழந்தைகளுக்கு இது பார்க்க பார்க்க அழகாகவும் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
Total Votes: 40
Total Views: 3253




