Recipe Name: தேங்காய் பிண்டி
Recipe by: PraveenaHari
Ingredients:
தேவையான பொருள்கள்:புழுங்கல் அரிசி - 2 டம்ளர் (தலை தட்டி), பச்சரிசி - 1 டம்ளர் (கோபுரமாக), நீட்டு காய்ந்தமிளகாய் - 12no., தேங்காய் - 2 டம்ப்ளர் (துருவியது), உப்பு - 4tsp, புளி - எலுமிச்சை அளவு (ஊற வைக்கவும்), சுமார்20g தாளிக்க:கடலை எண்ணெய் -15tsp, கடுகு1/2tsp, உளுத்தம் பருப்பு-1tsp, கடலைப்பருப்பு-1tsp, கருவேப்பிலை
Procedure:
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
சிகப்பு மிளகாய், ஊற வைத்த அரிசி, உப்பு, புளிக்கரைசல், தேங்காய் எல்லாம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, அனலை குறைத்து மூடி வைக்கவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து, மாண்டு எடுக்கவும். பிறகு மூடி போட்டு 10 நிமிடங்கள் வேகவைக்கவும். தேங்காய் பிண்டி தயார்.
Side dish: சின்ன வெங்காயம், வெல்லம்.
Total Votes: 55
Total Views: 1007