Recipe Name: சுரைக்காய் புழுசு (செக்க) பிண்டி
Recipe by: P.Nagasankari
Ingredients:
பச்சரிசி 1 கப், புழுங்கரிசி 1 கப், சுரைக்காய் 1 கப், மிளகாய்வற்றல் 4, புளி சிறிதளவு, வெல்லம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை
Procedure:
இரண்டு அரிசியையும் தனித்தனியே ஊறவைத்து, பின் மிளகாய்வற்றல், நறுக்கிய சுரைக்காய், உப்பு புளிக் கரைசல் வெல்லம் புழுங்கரிசி சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து விட்டு தனியாக பச்சரிசியையும் ரவை பதத்திற்கு அரைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை தாளித்து, பின் அரைத்த கரைசல் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து மிதமான அனலில் 7 நிமிடம் வரை வேக விடவும். பின், இறக்கி தோசை போன்று வரும் செக்கையை எடுத்து விடவும். இதுபோல் மூன்று முறை செக்கை எடுத்துவிட்டு, உப்புமா வெந்தவுடன் இறக்கிவிடவும் சுவையான, சத்தான சுரைக்காய் புழுசுபிண்டி தயார்.
பின்குறிப்பு
பலர் தேங்காய் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள முடியாமல்... செக்கப் பிண்டி விருப்பம் இருந்தும் சாப்பிட முடியாமல் போகிறது,
சுரைக்காய் சேர்ப்பதால் சுவை ஏதும் மாறுவதில்லை மிகவும் அருமையாக இருக்கும். பச்சரிசிக்கு பதிலாக வரகரிசி சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.
Total Votes: 62
Total Views: 882