
Recipe Name: தவிள பிள்ளலு
Recipe by: Latha 123
Ingredients:
புழுங்கல் அரிசி - 3 கப், துவரம் பருப்பு - 2 கப், உளுந்தம் பருப்பு - 1 கப், தேங்காய் - 1, உப்பு - தேவையான அளவு, சிகப்பு மிளகாய் - 7
Procedure:
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மூன்றையும் ஊற வைத்து அதனுடன் துருவிய தேங்காய் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து குருனையாக ஆட்டி எடுக்கவும். ஒரு தாலிப்பு கரண்டியில் நெய் 2 ஸ்பூன் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பு வர மிளகாய் 2 கிள்ளி போட்டு தாளித்து அரைத்த மாவில் சேர்க்கவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும் .
நெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றும் கலந்து ஒரு வாணலியில் 4 ஸ்பூன் ஊற்றி ஒன்றரை கரண்டி மாவு எடுத்து ஊத்தாப்பாம் போல் ஊற்றவும். அடுப்பை medium flame ல் வைத்து. வாணலியை மூடி வைத்து ரெண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் தவிள பிள்ளலு தயார்.
இதனை வெண்ணெய் , நெய் , மாங்க ஊறுகாய் அல்லது பூண்டு சட்னி எதனுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
Total Votes: 46
Total Views: 989




