Recipe Name: சியாளி
Recipe by: Khomala nandakumar
Ingredients:
சாதாரண இட்லி -10,சிவப்பு பட்டை மிளகாய்-10,பொட்டு கடலை-50கி,கொத்தமல்லி(தனியா-2ஸ்பூன்),பெரிய வெங்காயம்-5,தேங்காய் துருவல்-1/2மூடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை கொஞ்சம்,மஞ்சள் தூள்-1சிட்டிகை,உப்பு தேவையான அளவு
Procedure:
முதலில் 10இட்லிகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தட்டில் வைத்து கொள்ளவும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பின்னர் அதில் பாதி வெங்காயம், தேங்காய் துருவல்,பட்டை மிளகாய், தனியா, மஞ்சள் தூள், பொட்டு கடலை, உப்பு அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து 3 ஸ்பூன் ஆயில் விடவும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு போட்டு தாளித்து மீதி வெங்காயத்தை போட்டு வதக்கவும் பின் அதில் நறுக்கிய இட்லி துண்டுகள்,அரைத்து வைத்த மசாலா கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆகியவற்றை போட்டு நன்றாக கலைக்கவும்.ஐந்து நிமிடங்களில் சியாளி தயார்.
Total Votes: 34
Total Views: 697