Recipe Name: புட்டு ( தீபு மற்றும் காரம்)
Recipe by: S. Vijaya
Ingredients:
தீபு புட்டு: பைதம் பருப்பு -500 கி, Sakkarai - 400 கி, முந்திரி - 15, ஏலக்காய் - 10 கி, நெய் - 50 கி, தேங்காய் - 1, உப்பு - 1 சிட்டிகை. கார புட்டு: கடலை பருப்பு -250 கி, துவரம் பருப்பு - 100 கி, கடுகு - சிறிது அளவு, மல்லி - 10 கி, காய்ந்த மிளகாய் - 15, புளி - 50 கி, உப்பு - தேவையான அளவு.
Procedure:
தீபு புட்டு:
பைதம் பருப்பு 1 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். கிரைண்டரில் போட்டு கர கர என்று இட்லி மாவு போல அரைத்துக்கொள்ளவும். ஒரு சிட்டிகை உப்பு போட்டு இட்லி தட்டில் இட்லி வைப்பது போல 20 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தட்டில் ஒரு மணி நேரம் ஆரவைக்க வேண்டும். பானலை அடுபில் வைத்து காய்ந்த பிறகு நெய், முந்திரி, துருவிய தேங்காய் இவை அனைத்தையும் வறுத்து எடுத்து கொள்ளவும். பின்பு பானலை வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சக்கரை போடவும். சக்கரை கரைந்த உடன் ஆர வைத்த இட்லியை பூ போல் உத்தி கொண்டு சேர்த்து கொண்டு வறுக்கவும். நன்கு வறுத்த பின்பு வறுத்த தேங்காய், முந்திரியை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். இறகியதும் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும். கம கமக்கும் சுவையான இனிப்பு புட்டு தயார்.
கார புட்டு:
கள்ள பருப்பு 1 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பின்பு கிரைண்டரில் போட்டு கர கர என்று இட்லி மாவு போல அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு போட்டு இட்லி தட்டில் இட்லி வைப்பது போல 20 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தட்டில் ஒரு மணி நேரம் ஆரவைக்க வேண்டும். பானலை அடுபில் வைத்து காய்ந்த பிறகு கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி இவை அனைத்தையும் வறுத்து மிக்ஸயில் அரைத்து கொள்ளவும். பின்பு புளி பெரிய நெல்லிகா அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பானலை அடுப்பில் வைத்து காய்ந்த பிறகு எண்ணெய்(1 ஸ்பூன்), கடுகு, உளுத்தம் பருப்பு, கருவெப்பலை தாளித்து பின்பு புளி தண்ணீரையும், மஞ்சதுளையும், அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து இட்லியை பூ போல் உத்தி கொண்டு சேர்த்து கொண்டு வறுக்கவும். பின்பு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து சுவை பார்க்கவும். என்ன அருமையாக உள்ளதா நாம் தயாரித்த கார புட்டு😋. எல்லாரும் செய்ய ஆரம்பிங்க சுவையான புட்டுவை.
Total Votes: 251
Total Views: 1827