Recipe Name: கொள்ளு சாதம், வறுமிடியம்
Recipe by: Mrs Suganthini Balaji
Ingredients:
கொள்ளு சாதம் தேவையான பொருட்கள் 1. புழுங்கல் அரிசி -2 கப் 2. கொள்ளு - 3/4 கப் 3. தண்ணீர் -5 கப் 4. உப்பு - தேவையான அளவு வறுமிடியம் தேவையான பொருட்கள் 1. பச்சை மிளகாய்- 1/4கி 2. வெள்ளை குண்டு உளுந்து -2 டேபிள் ஸ்பூன் 3. உப்பு தேவையான அளவு 4. கடுகு -1 டீ ஸ்பூன் 5. பெருங்காய தூள் - 1/2 டீ ஸ்பூன்
Procedure:
கொள்ளு சாதம்
செய்முறை :
அடி கனமான வாணலியில் கொள்ளு சேர்த்து மிதமான தணலில் வெடிக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கொள்ளு ஆறிய பின் ஓன்றிடண்டாக பொடிக்கவும்.
புழுங்கல் அரிசி கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பொடித்த கொள்ளு சேர்த்து கால் பதம் வெந்ததும் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
சாதம் வெந்ததும் உப்பு சேர்க்க வேண்டும்.
வறுமிடியம்
செய்முறை
உளுந்தை கழுவி சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
பச்சை மிளகாய் ,உப்பு, ஊற வைத்த உளுந்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் கடுகு பெருங்காய தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு தட்டில் சுத்தமான கவர் அல்லது பட்டர் பேப்பர் வைத்து மிளகாய் விழுதை சிறிய அளவிலான வில்லைகளாக தட்டி 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
நன்கு இரண்டு பக்கமும் காயவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுமிடியம் சேர்த்து மிதமான சூட்டில் கடுகு பொரிந்ததும் இறக்கவும்.
கொள்ளு சாதம், வறுமிடியம் தயார்.
Total Votes: 7
Total Views: 588