Recipe Name: Sema Kudumbodi
Recipe by: Easwari Vijay
Ingredients:
ஷேம குடும்பொடி தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி -- ஒரு கப், துவரம்பருப்பு -- ஒரு கப், வரமிளகாய் --நான்கு, மிளகு. -- ஒரு தேக்கரண்டி, சீரகம் -- ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் -- சிறிதளவு, உப்பு --தேவையான அளவு, லட்சகட்டை இலை(தண்டிமுண்டாஆகு). தாளிப்பதற்கு: சமையல் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், தேங்காய்.
Procedure:
செய்முறை
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து மிளகு வரமிளகாய் சீரகம் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து ரவை பதத்தில் அரைக்கவும்
பின்பு ஒரு இலையை எடுத்து காம்பு பகுதியை நறுக்கி விட்டு சிறிது மாவை நடுவில் வைத்து பரப்பி இலையை சுருட்டவும் பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும் ஆறிய பிறகு இலையின் நடுவில் உள்ள தண்டை எடுத்துவிட்டு சிறிது சிறிதாக வட்டமாக நறுக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு,கடலை பருப்பு, வர மிளகாய் தாளித்து வட்டவட்டமாக நறுக்கிய இட்லியை சேர்த்து சூடாக்கி தேங்காய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்
Total Votes: 151
Total Views: 1213