Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Kollu ganji annam & kollu oorupindi
Recipe by: Nadiya Jayaprakash
Ingredients:
கெஞ்சி அன்னம்: புழுங்கல் அரிசி-1கப், உடைத்த கொள்ளு-1/4 கப், காய்சிய பால்-1/4 கப், தண்ணீர்-12கப், உப்பு தேவையான அளவு. ஊருபிண்டி: உடைத்த கொள்ளு - 1/4 கப், பூண்டு - 1 பல், காய்ந்த மிளகாய் -2, புளி- பட்டாணி அளவு, உப்பு- தேவையான அளவு.
Procedure:
கொள்ளை வெறும் வானலியில் வறுத்து, ஆரவைத்து விசுர் ராயி/ திருகாளி/ chakki யில் உடைத்து, புடைத்து தோல் நீக்கி கொல்லவும்.அரிசியை 20 நிமிடம் ஊரவைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் (12 கப் தண்ணீர் கொல்லும் அளவு) 1/4 கப் கொள்ளுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் வேகவைக்கவும். பிறகு அதில் மீதம் உள்ள 10 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு கழுவிய அரிசி சேர்த்து வேகவைக்கவும். அரிசி நன்றாக வெந்த உடன், 1/4 கப் காய்சிய பால், உப்பு சேர்த்து இரக்கவும். கொள்ளு கஞ்சி ரெடி. அரிசி இல்லாமல் வெறும் கெஞ்சியை தனியாக டம்லரில் சூப் போல் குடிக்கலாம். இது சளி பிடித்திருக்கும் பொழுது சாப்பிட்டால் சளியை கரைக்கும். சூப் எவ்வளவு வேண்டுமோ அதற்கு ஏற்ற அளவு தண்ணீரின் அளவை மாற்றி கொள்ளவும். கொள்ளு ஊருபிண்டி: 1/4 கப் உடைத்த கொள்ளை 15 நிமிடம் ஊர வைக்கவும். பிறகு மிக்சியில் கொள்ளு, பூண்டு, சிவப்பு மிளகாய், புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தால் ஊருபிண்டி ரெடி. கொள்ளு கெஞ்சியை கொள்ளு ஊருபிண்டி மற்றும் மோர் மிளகாய் உடன் சாப்பிடவும்.
Total Votes: 49

Total Views: 987