Recipe Name: கம்பு அடை
Recipe by: G.Rani
Ingredients:
கம்பு அடை தேவையான பொருட்கள் கம்பு ஒரு கப், வெங்காயம் 2, தேங்காய் ஒரு மூடி துருவியது, பச்சை மிளகாய் , கடுகு , கருவேப்பிலை.
Procedure:
செய்முறை :
ஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும் . தண்ணீர் கொதித்தவுடன் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு கம்பை ரவை போல் அரைத்து அந்த தண்ணீரில் சேர்த்துக் அடிப்பிடிக்காமல் கிளறவும் அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக செய்து தோசைக்கல்லில் அடைபோல் தட்டி பொன்னிறமாக சுடவும். சுவையான கம்பு அடை தயார்.
சைடிஷ்
தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய்
Total Votes: 9
Total Views: 594