Recipe Name: புளுசு பிண்டி, கம்மனி பிண்டி
Recipe by: Swarna Ranganathan
Ingredients:
புளுசு பிண்டி புழுங்கல் அரிசி, தேங்காய், உப்பு.,கடுகு ,உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு ,எண்ணெய், எலுமிச்சம்பழ அளவு புளி ,சிவப்பு மிளகாய். கம்மனி பிண்டி புழுங்கல் அரிசி ,துவரம் பருப்பு ,உப்பு, தேங்காய், எண்ணெய் ,கடுகு ,உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ,சீரகம் ,மிளகாய்..
Procedure:
புளுசு பிண்டி
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அரைத்து கொள்ள வேண்டும் .ஒரு கப் தேங்காய் தேவையான அளவு உப்பு எலுமிச்சம்பழ அளவு புளி காய்ந்த மிளகாய் 3 எடுத்துக்கொண்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அந்த விழுதை அந்த மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு தாளிக்க எண்ணை கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அந்த மாவில் போடவேண்டும் பின் ஒரு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த மாவை அதில் ஊற்றவேண்டும் புளுசு பிண்டி ரெடி.
கம்பனி பிண்டி
இரண்டு கப் புழுங்கலரிசி ஊறவைத்து அரைத்து கொள்ள வேண்டும் பின்பு கால் கப் துவரம்பருப்பு ஊறவைத்து அரைத்து அந்த மாவில் சேர்க்க வேண்டும் பின் ஒரு கப் தேங்காய் அதில் போடவேண்டும் தாளிக்க கடுகு .கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு, சீரகம் ,இரண்டு மிளகாய் சேர்த்து போட வேண்டும் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஐந்து ஸ்பூன் அந்த மாவை அதில் ஊற்றி இறக்கவும் கம்பெனி பின் டி ரெடி. இதற்கு சைட் டிஷ் தேங்காய் சட்னி
Total Votes: 7
Total Views: 532