Recipe Name: (சோள)ஜொன்னலு பிண்டி உப்புமா
Recipe by: Geetha G
Ingredients:
சோளம்-1/4படி, முருங்கை கீரை - 1 பிடி, உப்பு-தேவையான அளவு தாளிக்க-கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கா.மிளகாய்-4
Procedure:
சோளத்தை 3 மணிநேரம் ஊற வைத்து, கொரகொரப்பாக அரைத்து நீர்க்க கரைத்து கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் தாளித்து, கரைத்த சோள மாவை ஊற்றி, உப்பு, முருங்கைக்கீரை சேர்த்து கிளறி விடவும். கெட்டியானதும் அனலை குறைத்து மூடி வைத்து அவ்வப்போது கிளறி நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
Total Votes: 35
Total Views: 759