Recipe Name: Semiya Adai ( சேமியா அடை)
Recipe by: Girija S
Ingredients:
தேவையான பொருட்கள் : சேமியா - 1பாக்கெட், தயிர் - ஒரு கப் , பச்சை மிளகாய் இஞ்சி விழுது சிறிது, கேரட் துருவியது - ஒரு கப் , பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்„ உப்பு & எண்ணெய் - தேவையான அளவு.
Procedure:
செய்முறை விளக்கம் : முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டித் தயிரை கொட்டி நன்கு கடைந்து கொள்ள வேண்டும். அத்துடன் உப்பு „பச்சை மிளகாய் விழுது„ வெங்காயம்„ கேரட் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவேண்டும் . அதன் பிறகு ஒரு பாக்கெட் சேமியாவை அதில் கொட்டி நன்றாக கலந்துவிட வேண்டும். இந்த கலவை அரை மணிநேரம் ஊறவேண்டும். நன்கு ஊறிய பிறகு தோசைக்கல்லை அடுப்பின் மேல் வைத்து சேமியா கலவையை உருண்டையாக செய்து கல்லின் மேல் வைத்து சன்னமாக தட்ட வேண்டும். இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். நன்கு சிவந்து வந்தவுடன் சூடாக பறிமாறவும். இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸிற்கு ஏற்ற டிபன் இது .
Total Votes: 15
Total Views: 578