Recipe Name: கந்தி பப்பு இட்லி,கருப்பு மசாலா
Recipe by: uma mageswari
Ingredients:
கந்தி பப்பு இட்லி: கந்திபப்பு-1 கப், புழுங்கலரசி-1கப், உப்பு-தேவையான அளவு, சோடா உப்பு-சிறிதளவு, எண்ணெய்-சிறிதளவு. கருப்பு மசாலா: வெங்காயம்-4, உருளைக்கிழங்கு-4, பச்சைமிளகாய்-4, பூண்டு-7 பல்லு, மஞ்சள் தூள்-1ஸ்பூன்,உப்பு-தேவையான அளவு. மசாலா தாளிக்க: எண்ணெய்,சோம்பு,பட்டை, பிரியாணி இலை, இலவங்கம்.
Procedure:
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு (கந்தி பப்பு)
இரண்டையும் தனித்தனியாக 5மணி நேரம் ஊறவைத்து பின் அதை தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.அதை 6மணி நேரம் புளிக்க வைக்கவும்.பின் அந்த மாவை இட்லி வைக்கும் போது அதில் சிறிது சோடா உப்பு, 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து இட்லி தட்டில் வைத்து 30நிமிடம் வேகவைக்கவும்.
கருப்பு மசாலா: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சோம்பு, பிரியாணியை இலை, இலவங்கம் சேர்த்து வதக்கவும் பின்னர் அதில் மஞ்சள் தூள் 1ஸ்பூன் சேர்த்து மஞ்சள் தூள் கருப்பு நிறத்தில் மாற வேண்டும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் அத்துடன் அரைத்த பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும் . வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு சேர்த்து அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.மசாலா கெட்டியானதும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும்.
Total Votes: 93
Total Views: 900