Recipe Name: உத்துல ரொட்ட
Recipe by: keerthana Bathrinath
Ingredients:
இட்லி அரிசி 11/2கப், கறுப்பு உளுந்து 1/2கப்,மிளகு 2டீஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, உப்பு, சிகப்பு மிளகாய் 3, கொப்பரை தேங்காய் துருவல் 3ஸ்பூன், (நெய், கடலை எண்ணெய் ).
Procedure:
இட்லி அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் கறுப்பு உளுந்தை கழுவி ஊறவைத்த அரிசி, மிளகாய், பெருங்காயம்,மிளகு, கொப்பரை தேங்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்க கூடாது. தோசை கல்லில் மாவை ஊற்றி எண்ணெய் ஊற்றவும்.மூடியால் மூடி வெந்தவுடன் திருப்பி போட்டு நெய் ஊற்றி எடுக்கவும். இதுவே உத்துல ரொட்ட. இதற்கு தொட்டு கொள்ள சட்னி, தயிர், வெண்ணெய் சூப்பர் ஆக இருக்கும்.
இதில் உள்ள கறுப்பு உளுந்து, மிளகு, கொப்பரை தேங்காய் உடலுக்கு மிகவும் நல்லது.திருப்பதி வடை போன்று சுவையாக இருக்கும்.
Total Votes: 66
Total Views: 736