Recipe Name: முருங்கை கீரை குடும்பொடி🌿🍃
Recipe by: Daisirani
Ingredients:
இட்லி புழுங்கல் அாிசி. 1கப், துவரம்பருப்பு 1/2கப், சிவப்பு மிளகாய் 8, சிறிது புளி, தேங்காய் 1/4 மூடி, உப்பு தேவையான அளவு, சிறிய வெங்காயம்1/4 கப், முருங்கை கீரை1 1/2 கப், பெருங்காய தூள் சிறிது. தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு, கடலை பருப்பு, சிவப்பு மிளகாய் 1, சிறிது கருவேப்பில்லை
Procedure:
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இதை இட்டிலி பாத்திரத்தில் தட்டை இட்டிலியாக வேகவைத்து ஆாியபிறகு உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடு ஆனவுடன் எண்ணைனய சற்று விட்டு தாளிக்க தேவையான☝ பொருட்கள் சேர்த்து, பின் சிரிதாக நருக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதங்கிய பின் பொடிசெய்த இட்லியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின் உப்பு தேங்காய் துருவல் ,பெருங்காய தூள் சிறிது,புளிதண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
ஊட்டகாய் ,வெங்காயம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் சத்துக்கள்.💪
கார்போஹைட்டேடட்,🍚புரோட்டின்,இரும்பு🍃 சத்து,விட்டமீன்கள்,உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு🥥 சத்துக்களும் கிடைக்கும்.
பாரம்பரிய உணவுகள் அனைத்தும் உடலுக்கு எனர்ஜி💪 தரகூடியது.
இந்த தலைப்பை தேர்ந்து எடுத்த குழுவினருக்கு மிக்க நன்றி.
🙏😊
நம் பாரம்பரிய உணவுகள் பாதுகாக்கபடட்டும்.🙏😊🙏
Total Votes: 69
Total Views: 845