Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: டம்ளர் இட்லி (அ) பருப்பு இட்லி .
Recipe by: T L Lakshmi Prabha
Ingredients:
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி 1 டம்ளர் பாசிப்பருப்பு 1/2 டம்ளர் துவரம் பருப்பு 1/2 டம்ளர் கடலை பருப்பு 1/2 டம்ளர் பச்சை மிளகாய் 8 தேங்காய் 1/2 மூடி துருவிய கேரட் 1 கப் பெருங்காயம் 2 சிட்டிகை நெய் 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு சிறிதளவு உப்பு தேவைக்கு ஏற்ப
Procedure:
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை தனியாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசியுடன் பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து நொய்யாக அரைத்து வைக்கவும். ஊற வைத்த பருப்புகளை தனியாக நொய்யாக அரைக்கவும். பிறகு, அதை அரைத்து வைத்த அரிசியுடன் கலக்கவும். அதனுடன் நெய், உப்பு, சோடாஉப்பு, பல்லு பல்லாக (அ) துருவிய தேங்காயை சேர்க்கவும். கடைசியாக, கலக்கிய மாவை சின்ன சின்ன டம்ளர் (அ) கிண்ணம் எடுத்து அதில் நெய் தடவி பாதியளவு மாவை ஊற்றி சிறிதளவு துருவிய கேரட்டை மேலே பரப்பி இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான மற்றும் மிருதுவான டம்ளர் இட்லி ரெடி....
Total Votes: 157

Total Views: 1272