Recipe Name: திணை பொங்கல்
Recipe by: Pradheepa
Ingredients:
திணை 1 கப், பாசி பருப்பு 1/4 கப் தாளிக்க மிளகு, சீரகம், இஞ்சி துண்டு சிறிது, முந்திரி, கறிவேப்பிலை, உப்பு.
Procedure:
திணை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், மூன்று முறை கழுவி கொள்ளவும், பாசி பருப்பை ஒரு முறை கழுவி கொள்ளவும், குக்கரில் திணை, பாசி பருப்பை , சேர்க்கவும்
தண்ணீர் 4 கப் , உப்பு தேவையான அளவு, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும், குக்கரில் பிரஷர் குறைந்த பின் திறக்கவும், நன்கு மசித்து விடவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், இஞ்சி துண்டுகள், முந்திரி, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து பொங்களில் சேர்க்கவும். சுவையான திணை பொங்கல் ரெடி..
பக்க டிஷ்: தேங்காய் சட்னி, ஒரு வகை சாம்பார்.
Total Votes: 56
Total Views: 837