Recipe Name: Nachukottai keerai rings
Recipe by: Deepamalini Keshav
Ingredients:
நச்சுக்கொட்டை இலைகள் - 7, துவரம்பருப்பு - 1/2 டம்ளர், சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய் -1/4 மூடி, சிவப்பு மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு
Procedure:
துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய துவரம்பருப்பு, சீரகம், தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கீரையை கழுவி சுத்தம் செய்து கீரையின் பின்பக்கம் அரைத்த விழுதை மெலிதாக தட்டவும்.
கீரையின் அகலமான பகுதியில் இருந்து பாய் சுருட்டுவது போல சுருட்டி எல்லா இலைகளையும் தயார் செய்யவும்.
தயார் செய்த இலைகளை குக்கர் தட்டில் வைத்து வெயிட் போடாமல் 15 நிமிடம் வேக வைக்கவும்.
ஆறிய பிறகு குறுக்கு வாட்டத்தில் சிறு சிறு ரிங்ஸ் ஆக நறுக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வறுத்து பொடித்த மோர் மிளகாயை தாளித்து அதில் கீரை ரிங்ஸ் போட்டு கலந்து சூடாக பரிமாறவும்.
இது வைட்டமின்களும் புரதமும் நிறைந்த பாரம்பரிய உணவாகும்.
Total Votes: 189
Total Views: 1348