Recipe Name: Masala Pappu Rotta
Recipe by: R.Kousalya Ragunanthan
Ingredients:
பச்சரிசி மாவு-1 டம்ளர் துவரம் பருப்பு- கால் டம்ளர் சிவப்பு மிளகாய்-3 தனியா-2 ஸ்பூன் சீரகம்- 1 ஸ்பூன் Lemon - 1 ( சிறியது) துருவிய தேங்காய்- 3 ஸ்பூன் உப்பு தேவையான அளவு
Procedure:
வாணலியில் 11/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைக்கவும். நன்றாக கொதித்து வரும் பொழுது பச்சரிசி மாவு 1 டம்ளர் அதில் கொட்டி மிதமான தீயில் வைக்கவும். 15 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு மாவை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். துவரம்பருப்பை தண்ணீர்விட்டு முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும். தனியா, சிவப்பு மிளகாய், சீரகம் மூன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துவரம் பருப்பு, வறுத்து வைத்துள்ள சாமான்களையெல்லாம் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சட்னிக்கு அரைப்பது போல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். பிறகு கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு சேர்த்து கறிவேப்பிலை கொத்தமல்லி சன்னமாக அரிந்து போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
பச்சரிசி மாவு உருண்டைகளை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் இந்த கார சட்னியை நன்றாக பூசி பிறகு அதன் மேல் இன்னொரு பச்சரிசிமாவு சப்பாத்தியை வைத்து ஓரங்களில் எல்லாம் நன்றாக ஒட்டி விடவும். தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் பாரம்பரியமான சுவையான, நம் பாட்டிமார்கள் செய்த சத்தான மசாலா பப்பு ரொட்ட ரெடியாகி விட்டது.
Total Votes: 82
Total Views: 842