Recipe Name: கொட்டு பிண்டி ரொட்டி, பிதிக்கி பப்பு புலுசு.
Recipe by: Indumathi Senthil
Ingredients:
தேவையான பொருட்கள் : ரொட்டி செய்ய -- அரிசி மாவு 1 கப், உப்பு = தேவையான அளவு, எண்ணெய் = சிறிதளவு , தண்ணீர் =1.5 கப். புலுசு செய்ய := ஊறவைத்து தோலுரித்த மொச்சை கொட்டை =1/2 கிலோ, சிறிய வெங்காயம் =7, புளி =தேவையான அளவு., எண்ணெய் = 5 ஸ்பூன், உப்பு = தேவையான அளவு. கொத்தமல்லி = தே. அளவு. அரைக்க : 1 தே. பொருட்கள் = பெரிய வெங்காயம் 1 தீயில் சுட்டு கருகிய தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளவேண்டும். சாம்பார் பொடி =5 ஸ்பூன், சிறிய வெங்காயம் = 5, முழு பூண்டு 1, து. தேங்காய் = 4 ஸ்பூன். அரைக்க : 2 தேங்காய் 1 tbs, கசகசா 1 tbs.
Procedure:
செய்முறை :
ரொட்டி செய்ய : தண்ணீரில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மாவு சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்து மூடி வைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும், பின்பு சப்பாத்தி போல் தேய்த்து சுட்டு எடுத்து கொள்ளவும்.
புலுசு செய்ய :
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயதை நன்றாக வதக்க வேண்டும், பின்பு மொச்சை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். அடுத்து தண்ணீர் மற்றும் அரைத்த விழுது (1), அதில் பாதி சேர்த்து பருப்பை நன்றாக வேகவைக்கவும். பின்பு புளி கரைச்சல் மற்றும் மீதமுள்ள விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுது (2) சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கொதித்த உடன் மல்லி இலை சேர்த்து இறக்கி நெய் ஊற்றி கடுகு தாளித்து மூடி வைத்து விடவும்.
Total Votes: 90
Total Views: 926