Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Amirthabalam (மோர்களி)
Recipe by: Hemalatha Vishwaa
Ingredients:
புலுங்கல்அரிசி 2 டம்ளர் மோர் 1 டம்ளர் பச்சைமிளகாய் 6 கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி கறிவேப்பிலை சிறிதளவு கடுகு 3 தேக்கரண்டி வெங்காயம் (பெரியது) 4 எண்ணெய் (தேவையான அளவு) உப்பு (தேவையான அளவு) வெல்லம் 1 டம்ளர் ஏலக்காய்தூள் சிறிதளவு பாதாம்-சிறிதளவு முந்திரி-சிறிதளவு பிஸ்த்தா-சிறிதளவு சாரப்பருப்பு-சிறிதளவு வெள்ளரிவிதை- சிறிதளவு பூசணிவிதை- சிறிதளவு தர்பூசணிவிதை - சிறிதளவு நெய்- தேவையான அளவு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/2-தேக்கரண்டி பெருங்காயத்தூள் 1தேக்கரண்டி ந.எண்ணெய் 3 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு
Procedure:
கார AMIRTHABALAM:- அரிசியை நன்குகழுவி 4மணி நேரம் ஊரவைக்கவும், 1டம்ளர் அரியுடன், 1டம்ளர் மோர், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும் (நைஸாக), அரைத்த மாவில் தண்ணீர் ஊற்ற வேண்டும் (ரவாதோசை மாவு போல) க. பருப்பு (ஊரவைக்கவும்) உ. பருப்பு (ஊரவைக்கவும்) வானலியில் (கனமான) தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, ஊரவைத்த க. பருப்பு, உ. பருப்பு, பொடியாகநறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், இதில் அரைத்த மாவை சேர்த்து கிளறவும் (மிதமான தீயில்)கையில்ஒட்டாத பதத்தில் வந்ததும் இறக்கி வைத்து, ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும், அதில் கிளரிய அரிசிமாவை ஊற்றவும் 6மணிநேரத்திற்க்கு பிறகு கத்தியில் துன்டுகளாக்கவும் (கடலைமிட்டாய் போல), - - - - - - *****- - - - - - - இனிப்பு AMIRTHABALAM :- மேற்கூறியவாறு 1 க்கு1 என்ற அளவில் அரிசி, வெல்லம்கரைசல் சேர்த்து அரைத்து கொள்ளவும், வானலியில் (கனமான) நெய் விட்டு அனைத்து nut'sயும் சிறுதுண்டுகளாக நறுக்கி வதக்கவும் அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும், அல்வா பதம் வந்ததும் இறக்கி வைத்து, நெய் தடவிய தட்டில் ஊற்றவும், அதே போல் 6மணிநேரத்திற்க்கு பிறகு கத்தியில் துன்டுகளாக்கவும். ---------------****--------------- கடுகுபொடி:- ஒரு சிறிய கிண்ணத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம்தூள், உப்பு எடுத்து வைக்கவும், ஒரு வானலியில் ந. எண்ணெய் காய்ந்ததும் 2-தேக்கரண்டி கடுகு போட்டு வெடித்ததும், கிண்த்தில் சூடாக ஊற்றவும், இது காரamirthabalamதுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Total Votes: 217

Total Views: 1341