Recipe Name: பச்சி பிண்டி ரொட்ட
Recipe by: S.Bagya Lakshmi
Ingredients:
தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு - ஒரு கப் , தண்ணீர் - ஒன்றரை கப் , பெரிய வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது, கேரட் - 1 துருவியது , தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு & எண்ணெய் தேவைக்கேற்ப தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி : தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் - 4 பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்து கொள்ள வேண்டும். சிகப்பு மிளகாய் - 6, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - சிறிது , புளி & உப்பு - தேவைக்கேற்ப .எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
Procedure:
விளக்கம் : முதலில் வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் நெய் உப்பு வெங்காயம் கேரட் தேங்காய் துருவல் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும் . அரிசி மாவைக் கொட்டி இறக்கி விடவும். சூடாக இருக்கும் போதே அரிசி மாவை நன்கு பிரட்டி சிறுசிறு உருண்டைகளாக கையில் தண்ணீர் தொட்டு செய்துகொள்ளவேண்டும். வாழை இலையில் எண்ணெய் தடவி அந்த உருண்டையை வைத்து மெலிதாக ரொட்டி போல தட்ட வேண்டும். தோசைக்கல்லைச் சூடாக்கி ஒன்றன் பின் ஒன்றாக ரொட்டியை போட்டு இரு பக்கமும் எண்ணெய் விட்டு மூடி வைத்து நன்கு சிவந்த பிறகு பரிமாறவும் .பரிமாறும் பொழுது ரொட்டியின் மேலே சிறிது நெய் விடவும் .இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி சூப்பர் காம்பினேஷன். எங்கள் வீட்டில் மூன்று தலைமுறைகளாக எல்லோருக்கும் பிடித்த டிபன் ஐட்டம் இது.
Total Votes: 1054
Total Views: 5098