Recipe Name: Pappu rotta. பப்பு ரொட்ட
Recipe by: Lakshmi Chanduru .
Ingredients:
பச்சரிசி 200gms,துவரம் பருப்பு 100 gems,மஞ்சள் தூள், தேங்காய் துருவல், எலுமிச்சை, நெய்,எண்ணெய், உப்பு, கொத்தமல்லித்தழை, தாளிக்க--கடுகு,சீரகம்,முந்திரி, கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைமிளகாய்,மோர்மிளகாய்,கறிவேப்பிலை.
Procedure:
பச்சரிசியை 2மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மிகவும் நைசாக அரைக்கவும். உப்பு 1/2 டீஸ்பூன் சேர்க்கவும். அரைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து அதில் 1/2 டம்ளர் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது காய்ச்சி மாவில் சேர்த்து கலக்கி ,தோசை மாவு நீர்த்து இருக்கும் படி செய்து மெல்லிய தோசைகளாகவார்க்கவும்ஆறிய தோசைகளை அடுக்காக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம்பருப்பை குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்..அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள சாமான்களை தாளித்து பின் வெந்த பருப்பை சேர்த்து கிளறவும். பின் நறுக்கிய தோசை துண்டுகளை சேர்த்து கிளறவும். ருசிக்கேற்ப்ப உப்பு சேர்த்து பின் இறக்கவும் 'தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு,கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விட்டால் பப்பு ரொட்ட ரெடி
Total Votes: 99
Total Views: 1185