Recipe Name: மாங்காய் கார பூரி, கொத்தமல்லி பச்சடி
Recipe by: V. sasikala
Ingredients:
மாங்காய் பூரி: பச்சரிசி மாவு-1 கப், புளிப்பு மாங்காய்-3/4, அரைத்த பச்சைமிளகாய் விழுது- தேவைக்கேற்ப, உப்பு- சிறிதளவு, கடுகு- சிறிதளவு, எண்ணெய்- சிறிதளவு, கருவேப்பிலை- சிறிதளவு. கொத்தமல்லி பச்சடி: கொத்தமல்லி- 1கப், துருவிய தேங்காய் 3/4கப், பெருங்காயத்தூள்-சிறிதளவு, பச்சைமிளகாய்-5, தயிர்- 1/2கப், உப்பு-சிறிதளவு.
Procedure:
மாங்காய் பூரி செய்ய:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை, பச்சைமிளகாய் விழுது, துருவிய மாங்காய் சேர்த்து வதக்கவும் பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பச்சரிசி மாவு சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.மாவு வெந்ததும் நன்றாக கிளறி கீழே இறக்கவும் பிறகு அதை சிறிய சிறிய உருண்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கொத்தமல்லி பச்சடி செய்ய:
கொத்தமல்லி, தேங்காய், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் அதில் கடுகு, உ.பருப்பு தாளித்து சேர்க்கவும்.
Total Votes: 195
Total Views: 1463