Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: வேடசந்தூர் பாரம்பரிய ஸ்பெஷல் - அலசந்தலு குடும்பு (தட்டப்பயிறு இட்லி )
Recipe by: Bala Ramakrishnan
Ingredients:
தட்டப்பயிறு -400 gms, நன்கு கழுவி காய வைத்த பச்சை அரிசி - 600gms, தேங்காய் - 1 பெரியது (அரை மூடி கலவைக்கு மற்றும் அரை மூடி இனிப்பு பாகுக்கு ), இனிப்புக்கு பாகு செய்வதற்கு பொருட்கள் : மண்டை வெல்லம் - 300 gms, தேங்காய் - அரை மூடி , முந்திரி - 50 gms, ஏலக்காய் - 5, காரம் செய்வதற்கு பொருட்கள் : எண்ணெய், கடுகு, உளுந்து, ஏற்கனவே தாளித்த மோர் மிளகாய்.
Procedure:
Step :1 தட்டப்பயிரை நன்கு ஊற வைத்து cooker இல் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும். Step : 2 கழுவி ஆற வைத்த பச்சை அரிசி யை குருணை போல் மிக்ஸியில் போட்டு எடுத்து கொள்ளவும். பிறகு அரிசி 1: தண்ணீர் 2 என்ற கணக்கில் கடாயில் தண்ணீர் ஊற்றி எண்ணெயோட உப்பு சுவைக்கு கொதி வந்ததும் குருணை சேர்த்து கிளறி எடுத்து கொள்ளவும். Step : 3 வேக வைத்த தட்டப்பயிரை யும் குருணை யும் துருவிய தேங்காய் உடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.. அதில் பாதி கலவையை இனிப்புக்கும் பாதி கலவை காரத்திற்கும் பிரித்து கொள்ளவும். Step : 4 இனிப்பு செய்முறை : அந்த பாதி கலவையை எடுத்து லெமன் அளவுக்கு உருட்டி மெதுவாக தட்டி இட்லி thattil வைத்து 10 நிமிஷம் வேக வைக்கவும். வெல்லம் பாகு உடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம் தான்.. ( அரை மூடி தேங்காய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து அரைத்து பிறகு வெல்லம் பாகுடன் கலந்து கொதி விட்டு தயார் செய்யவும்) சுவையான இனிப்பு அலசந்தலு குடும்பு thayar... **மேலே நெய் ஊற்றி சாப்பிடலாம். குழந்தைகளைக்கு மிகவும் பிடிக்கும்.. காரம் செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து தாளித்த மோர் மிளகாயை தாளித்து பிறகு அந்த கலவையுடன் சேர்த்து இனிப்பு போலே urutti தட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். அருமையானா காரம் அலசந்தலு குடும்பு தயார் மேலே நல்ல எண்ணெய் ஊற்றி பரிமாறலாம்... குறிப்பு : மீதம் இருந்தால் அதை கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெங்காயம் தாளித்து பிறகு காரம் அலசந்தலு குடும்பை உதிரி செய்து சேர்த்து கலந்து பரிமாறின பாருங்க அருமையோ அருமை... அலசந்தலு குடும்பு எங்கள் வேடசந்தூர் பாரம்பரியமான உணவு... எல்லோருக்கும் பிடித்த உணவு.. நன்றி பாலா ராமகிருஷ்ணன்.
Total Votes: 162

Total Views: 1219