Recipe Name: Godi Gundlu ( கோடி குண்ட்லு)
Recipe by: R.Sowdhamani
Ingredients:
பச்சரிசி மாவு - 200கி, தண்ணீர் - 300மி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன் பூரணம் செய்வதற்கு - பயத்தம் பருப்பு - 150 கி, பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப தாளிக்க - கடுகு - 1 டீஸ்பூன், மஞ்சத்தூள் - சிறிதளவு, கருவேப்பிலை - 1 ஆர்க்கு பெரிய வெங்காயம் - 2, உப்பு, மிளகாய் பொடி - சிறிதளவு, நன்கு அரைத்துக் கொள்ளவும்
Procedure:
முதலில் 300 கிராம் தண்ணீர் வாணலியில் ஊற்றி எண்ணெய் உப்பு போட்டு நன்கு கொதி வந்தவுடன் அரிசி மாவு போட்டு இறக்கி விடவும். நன்கு புரட்டிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். வேகவைத்த பயத்தம் பருப்பை நன்கு மசித்துக் கொண்டு அதனுடன் பச்சை மிளகாய் விழுது உப்பு எலுமிச்சை ரசம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
புரட்டிய அரிசிமாவை கையில் கிண்ணம் போல செய்து அதில் பூரணத்தை வைத்து கோழி முட்டைவடிவத்தில் செய்துகொள்ளவேண்டும். அதை 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நன்கு ஆறிய பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு மஞ்சள் தூள் கறிவேப்பிலை தாளித்து பெரிய வெங்காயம் மிளகாய்ப்பொடி உப்பு சேர்த்த விழுதை அதில் கொட்டி நன்கு கலக்கிய பின் ஆறவைத்த கோடி குண்ட்லுவை மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு கரண்டியின் பின்புறமாக மெதுவாக கலக்கவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். இப்போது சுவையான டிபன் ரெடி.
Total Votes: 49
Total Views: 858