Recipe Name: Suraikkai Paayasam (சுரைக்காய் பாயாசம்)
Recipe by: J. Sruthi Gopalakrishnan
Ingredients:
சுரைக்காய் (சிறு துண்டுகளாய் நறுக்கியது)-1கப், பால்- 200ml, நாட்டு சர்க்கரை - சுவைக்கு ஏற்ப, தேங்காய் - 1 மூடி, கசகசா -25 gms, முந்திரி -25gms, பாதாம், உலர் திராட்சை, பரங்கி விதை -25gms, வெள்ளரி விதை-25gms, ஏலக்காய்-4 , நெய் - 2 மேஜைக்கரண்டி.
Procedure:
சுரைக்காய் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு குக்கரில் சுரைக்காய் துண்டுகளை பாலில் வேகவைத்து எடுக்கவும். தேங்காய் துருவல், கசகசா, முந்திரி, ஏலக்காய், பாதாம், வெள்ளிரி விதை, பூசனிவிதை ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். வேகவைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது முந்திரி, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து எடுத்து சுரைக்காயுடன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான சுரைக்காய் பாயாசம் தயார்.
விரைவில் செய்யக்கூடியது. சத்தானது... சுவையானது....
Specialities:
சுரைக்காய் :
உடல் சூட்டைத் தனிக்கும். வயிரு பிரச்சனைகள் நீங்கும். சிறுநீர் பிரச்சனைகள் நீங்கும். இருதயத்திற்கு நல்லது.
நாட்டுச்சர்க்கரை:
ரத்த சுத்தி, கொழுப்பை கரைக்கும்,
மலச்சிக்கல், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முந்திரி, பாதாம், உலர் திராட்சை, வெள்ளிரி விதை, பரங்கி விதை, கசகசா :
வாய்ப்புண், குடற்ப்புண் ஆற்றும்,
உடல் சூட்டைக் குறைக்கும். வைட்டமின், உடலில் கெட்ட கொழுப்பை மாற்றி நல்ல கொழுப்பை உருவாக்கும். ரத்த அழுத்தம் குறையும்.
Total Votes: 274
Total Views: 2028