Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: செக்கு தோசை
Recipe by: Kalavathy Venkatachalapathy
Ingredients:
தேவையான பொருட்கள் :- அரிசி குருணை (பச்சரிசி ஊறவைத்து பின்பு உலரவைத்து மிக்ஸியில் குருணையாக அரைத்துக்கொள்ள வேண்டும் )= 3 கப், கடலை மாவு =1 கப், கடைந்த தயிர் = 4 முதல் 5 கப் , ப. மிளகாய் விழுது = தேவைக்கு ஏற்ப, பெருங்காயம் =சிறுது, உப்பு = தேவைக்கு ஏற்ப, ஊறவைத்த க. பருப்பு = சிறிது, பொடியாக நறுக்கிய வெங்காயம் = தேவையான அளவு , கொத்தமல்லி = சிறிதளவு , கடுகு தாளிக்க.
Procedure:
செய்முறை.. அரிசி குருணை, தயிர், கடலை மாவு, ஊறவைத்த க. பருப்பு, வெங்காயம், ப. மிளகாய் விழுது, பெருங்காயம், கடுகு, உப்பு, கொத்தமல்லி. இவை அனைத்தும் ஒன்று சேர்த்து தோசை மாவு போல் கறைத்துக்கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மாவை 8 முதல் 10 நேரம் ஊறவைக்கவேண்டும்.. ஊறவைத்த மாவை தோசை கல்லில் தடிமனாக ஊற்ற வேண்டும் குறைந்த தீயில் சுட வேண்டும் பின்பு தோசையை திருப்பி போட்டு குறைந்த தீயில் சுட வேண்டும்... மொறு மொறுப்பான, மிருதுவான செக்கு தோசை தயார்.
Total Votes: 92

Total Views: 1147