Recipe Name: தவிளகுடும்
Recipe by: Mrs Ramathilagam susindra
Ingredients:
தேவையான பொருட்கள் 1.புழுங்கல் அரிசி -2கப் 2.துவரம் பருப்பு-2௧ப் 3.தேங்காய் துருவல்-1கப் 4.உப்பு- தேவையான அளவு 5.எண்ணெய்- தேவையான அளவு மிரியம் 1.வெங்காயம் -1/4 கி 2.சிகப்பு மிளகாய்-8 3.புளி -சிறிய நெல்லிக்காய் அளவு 4.வெல்லம் -சிறிய துண்டு 5.உப்பு- தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: 1.கடுகு-1 டீ ஸ்பூன் 2.எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன் 4.கறிவேப்பிலை -சிறிது 5.பெருங்காயத்தூள் - சிறிது
Procedure:
செய்முறை
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு இரண்டும் சம அளவு இருக்க வேண்டும்.
அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக கழுவி சுத்தம் செய்து 2மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய அரிசி, பருப்பை கெட்டியாக ரவை போல் நொரநொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அதில் உப்பு மற்றும் தேங்காய் துருவல் தேவையான அளவு சேர்ந்து நன்கு கலந்து அரை மணி நேரம் கழித்து அடை வார்க்க வேண்டும்.
பொகானி சூடான பின் 1 1/2 கரண்டி மாவை சற்று தடியாக வார்த்து மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் திருப்பி விட்டு பொன்னிறமாக எடுக்க வேண்டும்.
மிரியம் செய்முறை:
வெங்காயம், மிளகாய், உப்பு, புளி, வெல்லம் அனைத்து பொருட்களையும் ஒன்றாக நைசாக அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்ந்து தாளித்த பின் அரைத்த விழுதை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வதக்கி இறக்கவும்.
அடை
மிரியத்துடன் சூடாக பரிமாறவும் .
Total Votes: 172
Total Views: 1331