Recipe Name: அலசந்தலுபில்லலு(Allasanthallubillalu)
Recipe by: S.Mahalakshmi
Ingredients:
தட்டைப்பயறு - 150 கிராம் பச்சரிசி குருணை - 1 டம்ளர் தண்ணீர் - 2 டம்ளர் சிறிது உப்பு
Procedure:
தட்டைப்பயறு இரவே ஊற வைக்கவும். காலையில் குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு வேக வைத்து தனியாக வைக்கவும். பிறகு வாணலியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதுக்கு தேவையான உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்த பின் அரிசி குருணையை அதில் போட்டு நன்றாக கலக்கவும். அதில் வெந்த தட்டை பயிரையும் சிறிது தேங்காய் துருவலையும் போட்டு கலந்து விடவும். ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து அதை தட்டையாக செய்து இட்லிப் பானையில் வேக வைத்து இறக்கவும். 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வறுத்த தேங்காய் காரச் சட்னி செய்ய :
தேங்காய் - 1/2 மூடி
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை கொஞ்சம்
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் அரை மூடி தேங்காயை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அதனுடன் சிறிது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
இனிப்புக்கு தேவையானது : அரை மூடித் தேங்காய், சிறிது வெள்ளரி விதை, கசகசா - 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சிறிது
இது அத்தனையும் மிக்ஸியில் பால் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் இந்த விழுதை போட்டு பால் ஊற்றி வெல்லம் போட்டு பாயாசம் செய்வது போல் காய்ச்சவும்.
இந்த டிபனுக்கு ஸ்வீட் காரம் இரண்டையும் வைத்து சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
Total Votes: 66
Total Views: 2030