Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கடலை பருப்பு சியாலி (Bengal Gram Dal Chiyali)
Recipe by: A. H. Yamini Nagaraj
Ingredients:
* கடலை பருப்பு - 200gm * உப்பு - தேவையான அளவு * புளி - எழுமிச்சை அளவு * மஞ்சள் தூள் - 2 சிட்டிகை * வெங்காயம் - 2 சிறு துண்டுகளாக நறுக்கவும் * தாளிக்க தேவையான அளவு எண்ணெய் * கடுகு , கடலை பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி * கொட்டு பொடி (கடலை பருப்பு - 3 TSP , உளுத்தம்பருப்பு - 1tsp, தனியா - 1/2tsp, மிளகாய் -6, உப்பு எல்லாவற்றையும் வதக்கி பொடி செய்துக் கொள்ளவும்.
Procedure:
1. கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். 2. ஊறவைத்த பருப்பை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் 3.அரைத்த மாவை 4மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் ஒரு தட்டில் எண்ணெய் பூசி 20 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். 4. ஆறிய பின் சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 5. ஒரு பாத்திரத்தில் புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கலக்கி அந்த துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். 6. ஒரு வாணலியில் 5tsp எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் ஊறிய துண்டுகள் மற்றும் கொட்டு பொடி சேர்த்து நன்கு சூடாகும் வரை கிளறவும் பின் கொத்தமல்லி போட்டு இறக்கிவிடவும்....... 🍜 Tasty Bengal Gram Dal Chiyali Ready👌
Total Votes: 118

Total Views: 1118