Recipe Name: வெந்தயக்களி
Recipe by: Savitha N
Ingredients:
தேவையான பொருட்கள் ஒரு கப் பச்சரிசி, அரை கப் பூண்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம், அரைக் கப் கெட்டியான தேங்காய்ப்பால், உப்பு.
Procedure:
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் பூண்டை சேர்த்து 5 நிமிடம் வெந்ததும், பச்சரிசியை கழுவி அதில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்து குழைந்து வந்தவுடன் உப்பு சேர்த்து கெட்டியான தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கலந்து இறக்கவும். இதற்கு அப்பளம் ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் நன்கு ருசியாக இருக்கும்.
நம் வீட்டில் எப்பொழுதும் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஆரோக்கியமான டிபன்
1.வெயிலுக்கு உகந்த சிற்றுண்டி வெயிலுக்கு உகந்த சிற்றுண்டி,
2.வயிறு எரிச்சல் வயிறு வலிக்கு நல்லது
3.வாயுத்தொல்லை நீங்கும்.
தரமான காலை விருந்து. அனைவரும் செய்து பயன் பெறுவீர்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய உணவு சிறு மணித்துளிகளில் செய்யக்கூடிய காலை உணவு ..
Total Votes: 141
Total Views: 1184