Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: முடக்கத்தான் தோசை
Recipe by: Nalini
Ingredients:
முடக்கத்தான் கீரை-1கப் பச்சை அரிசி-1 கப் ஜீரகம்-1 ஸ்பூன் மிளகு-1/2 ஸ்பூன் உப்பு- தேவையான அளவு சட்னி: பூண்டு-1 கட்டி வரமிளாய்-3 புளி-சிறிது உப்பு -தேவையான அளவு எண்ணெய்-3 ஸ்பூன் கடுகு- சிறிது பெருங்காயம்- ஒரு சிட்டிகை ஜூஸ்: கறிவேப்பிலை-1 கப் தேங்காய்-1 கப் வெல்லம்-1 டேபிள் ஸ்பூன்
Procedure:
முடக்கத்தான் தோசை: அரிசி ஊறவைத்து கொள்ளவும். ஒரு மிக்சி கப்பில் கீரை, அரிசி, ஜீரகம், மிளகு, உப்பு , தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு தோசை ஊற்றி எடுக்கவும். சட்டினி: பூண்டு,வரமிளாய்,புளி,உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,பெருங்காயம், சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கறிவேப்பிலை ஜுஸ்: கறிவேப்பிலை,தேங்காய்,வெல்லம், சேர்த்து அரைக்கவும். பிறகு ஒரு வடிகட்டி கொண்டு பிழிந்து கொள்ளவும். பயன்கள்: முடக்கத்தான் கீரை மூட்டு வலி,கை, கால் வலிக்கு சிறப்பு மருந்து. பூண்டு வாய்வை நீக்கும். கறிவேப்பிலை தலைமுடிக்கு நல்ல கருமை நிறத்தை தருகிறது.முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
Total Votes: 67

Total Views: 790