Recipe Name: கந்திபப்பு குடும்பொடி
Recipe by: Santhanalakshmi. S
Ingredients:
தேவையான பொருட்கள்- புழுங்கல் அரிசி 2டம்ளர், துவரம் பருப்பு 1/2டம்ளர், மிளகாய் வற்றல் 5அல்லது6, தேவையான அளவு உப்பு, தாளிக்க, வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு -1/2ஸ்பூன், கடலை பருப்பு1 ஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு.
Procedure:
முதலில் அரிசி பருப்பை களைந்து 2மணிநேரம் ஊற வைக்கவும்.
அத்துடன் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து ரவைபதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
5மணி நேரம் புளிக்க வைக்கவும்.மாவு புளித்ததும்,இட்லி தட்டில் அல்லது குக்கர் தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.
ஆறியதும் நன்கு உதிர்த்து கொள்ளவும்...
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,இரண்டு மிளகாய் வற்றல்கிள்ளி போட்டு(காரத்திற்கு தகுந்தவாறு) கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
பின் உதிர்த்த உப்புமாவை சேர்த்து கிளறி தேவையான தேங்காய் பூ ,உப்பு சேர்த்து (தண்ணீர் தேவைபட்டால் தொண்டை பிடிக்காமல் இருக்க ...1/2டம்ளர் தெளித்து சேர்க்கலாம்)...
கிளறி இறக்கியதும் சூடாக பரிமாறவும்...
ருசியான கந்திபப்பு குடும் பொடி தயார்...
இந்த பாரம்பரிய உணவு என் பாட்டியின் வீட்டில் அவர் மாமியார் செய்தது...
நன்றி🙏
பகிர்வு
சந்தானலஷ்மிசிவக்குமார்.திண்டுக்கல்
Total Votes: 262
Total Views: 2479