Recipe Name: உப்பிடி பிண்டி ரொட்டி
Recipe by: ARCHANA PRABHAKARAN
Ingredients:
தேவையான பொருட்கள் : ------------------------------------------------- அரைக்க : ------------------ 1. இட்லி அரிசி - 1 கப் /200 கி , 2. தேங்காய் - சிறிதளவு , 3. சீரகம் -1 ஸ்பூன் , 4. புளி - பெ நெல்லிக்காய் அளவு , 5. கருவேப்பிலை - சிறிதளவு , 6. காய்ந்த மிளகாய் - 5 , 7. பெருங்காயம் - சிறிதளவு , 6. உப்பு - தேவைக்கு ஏற்ப . மாவில் சேர்க்க : ----------------------------- அரிந்த வெங்காயம் - தேவைக்கு ஏற்ப , ஊறவைத்த கடலைப்பருப்பு -1 ஸ்பூன் , கொத்தமல்லி - சிறிது , கடுகு தாளித்து
Procedure:
செய்முறை
---------------------
அரிசியை 4 முதல் 5 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். புளி மற்றும் மிளகாய் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். அரைக்கவேண்டிய பொருட்கள் அனைத்தும் கிரைண்டரில் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக , நைசாக அரைத்து கொள்ள வேண்டும். மாவை 8 முதல் 10 மணி வரை புளிக்க வைக்க வேண்டும். புளித்த மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கடலை பருப்பு, கடுகு அனைத்தும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். தோசை கல்லில் எண்ணெய் தடவி படத்தில் இருப்பது போல் சிறிது அளவு மாவினை எதுத்து தோசை கல்லில் மெலிந்து தட்ட வேண்டும்(கைக்கு எண்ணெய் பூசி கொள்ள வேண்டும் ). அடுப்பை பற்ற வைத்து மாவு தட்டிய தோசை கல்லை அதன் மேல் வைக்க வேண்டும் பின்பு மூடியால் மூட வேண்டும். சிறிது நேரத்திற்கு பின் ரொட்டியை திருப்பி போட்டு சுட வேண்டும்.
ரொட்டி தயார் சுட சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குறிப்பு : இது நமது வைஸ்ய பாரம்பரிய உணவு, எனது பாட்டியிடம் இருந்து.
Total Votes: 173
Total Views: 1524