
Recipe Name: கொட்டு தோசை
Recipe by: M.Saranya
Ingredients:
பச்சரிசி,ஈர அரிசி மாவு, உப்பு,தயிர்
Procedure:
ஒரு படி அரிசியை கழுவி அதை சிறிது நேரம் உற வைத்து ரைஸ் மில்லில் ஈர பதத்தில்நைஸாக அரைத்துக் கொள்ளவும்.பின் கால் படி அரிசியை கழுவி சிறிது நேரம் ஆற வைத்து அதை ரவை போல் மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.பின் ஒரு பாத்திரத்தில் 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ரவை போல பொடித்த அரிசியை சேர்த்து கஞ்சி போல் நன்றாக கிளறி வெந்ததும் அதை ஆற விடவும்.நன்றாக ஆறியதும் ஈர அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்து விட வேண்டும்.இரவு இதை கலந்து வைத்து விட வேண்டும்.காலையில் இதனுடன் சிறிது தயிர் சோடா உப்பு சேர்த்து கலந்து தோசை செய்தால் சுவையான தோசை ரெடி.இதை மிரியத்துடன் பரிமாறலாம்.தோசை வார்க்கும் போதே சிறிது தோசை மேல் சீனி தூவினால் இனிப்பு தோசை ரெடி.
இவ்வாறு இரண்டு வகையான தோசை ஒரே மாவில்.
உண்டு மகிழுங்கள்.
Total Votes: 22
Total Views: 781




