Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: துவரம்பருப்பு சியாலி
Recipe by: Praveena Mohan
Ingredients:
•துவரம் பருப்பு - 1கப் •உளுந்து - 1கைபிடி •சிவப்பு மிளகாய் - 4 •உப்பு - தேவையான அளவு •புளி - எளுமிச்ச அளவு •வெல்லம் - 2ஸ்பூன் •பெருங்காயம் - 2 சிட்டிகை •கொட்டு பொடி - 4ஸ்பூன் •மஞ்சள் பொடி - 2 சிட்டிகை •வெங்காயம் - 2 நீளமாக வெட்டிக் கொள்ளவும் • தாளிக்க எண்ணைய்,கடுகு,கறிவேப்பிலை, உ.பருப்பு 1/4,க.பருப்பு 1/4 கொட்டு பொடி: •துவரம்பருப்பு - 2tbs •உளுந்தம்பருப்பு - 2tbs •தனியா - 2tbs •வெந்தியம் - 1/4tbs •மிளகாய் - 3 எல்லாவற்றையும் வாணலியில் வதக்கி பொடி செய்துக்கொள்ளவும்
Procedure:
1.இரண்டு பருப்புகளையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். 2.ஊறவைத்த பருப்புகளுடன் சிவப்பு மிளகாய்,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். 3.குக்கரில் ஒரு தட்டில் எண்ணெய் பூசி அந்த மாவை உற்றி 20 நிமிடம் வேகவைக்கவும். 4.ஆறிய பிறகு சின்னசின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 5.ஒரு கிண்ணத்தில் புளி தண்ணீரில் உப்பு,மஞ்சள் தூள், பெருங்காய தூள்,வெல்லம்,கொட்டு பொடி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி அந்த துண்டுகளை சேர்த்து நன்று கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும். 6.பிறகு வாணலியில் 4tbs எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை, உ.பருப்பு,க.பருப்பு தாளிக்கவும் .வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் ஊறிய துண்டுகளை சேர்த்து நன்கு சூடாகும் வரை கிளறவும். ❤Yummy Chiyali Ready🤤
Total Votes: 336

Total Views: 2128