Recipe Name: கோழி முட்டை
Recipe by: Kalpana Jayakumar
Ingredients:
அரிசி மாவு 2கப், பாசிப் பருப்பு 1கப், பச்சை மிளகாய் 5, கடுகு 1டீஸ்பூன், கறிவேப்பிலை, வெங்காய சட்னி (மிரிகம்)
Procedure:
பாசிப்பருப்பை 11/2 மணி நேரம் ஊற வைக்கவும். பிட்டுக்கு அரைப்பதற்கு போன்ற அரைத்து இட்லி போல் வேகவைத்து பொடியாக உதிர்த்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து உதிர்த்து வைத்துள்ள போட்டு பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து போட்டு உப்புமா செய்து சிறு சிறு உருண்டைகளாக செய்து வைத்து கொள்ளவும்.
அரிசி மாவை கொழுக்கட்டை மாவு போன்ற கிளறவும் (2கப் மாவிற்கு 2கப் தண்ணீர் வைக்கவும்) நன்கு பிசைந்து உருண்டைகளாக செய்து சப்பாத்தி பிரஸ்ஸில் கொஞ்சம் மொத்தமாக அமுக்கி பருப்பு உருண்டை களை வைத்து முடி கோழி முட்டை போல் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய உடன் வானலில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த கோழி முட்டைகளை போட்டு வெங்காய சட்னியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து கோழி முட்டை மேல் ஊற்றி மெதுவாக கிளறவும். அடுப்பை சிம்ல வைத்து 5 அல்லது 6 ஆக போட்டு கிளறவும், சுவையான கோழி முட்டை தயாரகி விட்டது...
Total Votes: 27
Total Views: 1746