Recipe Name: பைத்தம் பருப்பு இனிப்பு பிட்டு மற்றும் கார பிட்டு
Recipe by: Indhumathi Senthil kumar
Ingredients:
பைத்தம்பருப்பு 2டம்ளர், நெய் 5ஸ்பூன், சர்க்கரை தேவையான அளவு, முந்திரி 10, துருவிய தேங்காய் சிறிதளவு, எண்ணெய் 5 ஸ்பூன், கடுகு தாளிக்க, க.பருப்பு தாளிக்க, 4 பச்சை மிளகாய், 1/2 எலுமிச்சை, உப்பு தேவையான அளவு
Procedure:
பைத்தம் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த இட்லிகளை ஐந்து வினாடிகள் போட்டு எடுத்து பின்பு இட்லி உப்புமாவிற்கு உதிர்ப்பது போல் உதிர்த்துக் கொள்ளவும். இனிப்பு பிட்டு
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி பருப்புகளை போட்டு சிவந்ததும் உதிர்த்த இட்லிகளைப் போட்டு 5 நிமிடம் கிளறி பின்னர் அவரவர் சுவைக்கு தேவையான அளவு சர்க்கரையும் தேங்காயையும் சேர்த்து பரிமாறவும்
கார் பிட்டு
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கடலை பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து பின்பு உதிர்த்து வைத்த இட்லியை போட்டு 5 நிமிடம் கிளறி உப்பு சேர்த்து அரை எலுமிச்சையை பிழிந்து பரிமாறவும்
Total Votes: 139
Total Views: 1130