Recipe Name: சீயாளி (காரம் & இனிப்பு )
Recipe by: mailkalamani
Ingredients:
காரம் சீயாளி : Ingredients : இட்லி மாவு (20 இட்லிக்கு தேவையானது) பெரிய வெங்காயம் -- 4 செக்கு கடலைஎண்ணெய் -- 3 tablespoon அரைக்க : ஒரு பெரிய மூடி தேங்காய்ப்பூ சிகப்புமிளகாய் -- 7 பொட்டுக்கடலை -- 1 tablespoon தனியா -- 1 spoon மஞ்சள்தூள் -- 1 spoon புளி -- 1 inch உப்பு -- தேவையான அளவு தாளிக்க : கடுகு , கருவேப்பில்லை , பெருங்காயம் இனிப்பு சீயாளி : Ingredients : cut செய்த இட்லி 2 டம்ளர் நெய் -- 2 ஸ்பூன் சர்க்கரை -- 1/2 டம்ளர் ஏலக்காய் -- 4 முந்திரி -- 1 tablespoon துண்டுகள் தேஙகாய் -- 2 tablespoon
Procedure:
காரம் சீயாளி செய்முறை :
இட்லிகளை வேகவிட்டு ஆறவிட்டு cut செய்யவும் . அதில் இனிப்பிற்கு 2 டம்ளர் எடுத்து வைத்து விடவும். 4 வெங்காயங்களை சதுரங்களாக அரியவும். அரைக்க வேண்டியவற்றை அரைக்கவும். வாணலியில் என்னை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, பெருங்காயம், cut செய்த கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய துண்டுகளை போட்டு soft ஆக ஆகும் வரை வதக்கி அரைத்த கலவையயை (சட்னி பதம்) போட்டு 2 நிமிடம் வதக்கி cut செய்த இட்லி துண்டுகள் (சுமார் 16 இட்லி) போட்டு தீயயை சிறிது குறைத்து நிதானமாக நன்கு பிரட்டி ஒரு சேர கலந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவவும் . சுவையான நமது பாரம்பரிய உணவு சீயாளி ready.
இனிப்பு சீயாளி செய்முறை :
வாணலியில் நெய் 2 spoon ஊற்றி, உடைத்த முந்திரி போட்டு சிவந்ததும் தேங்காய்ப்பூ போட்டு கலந்து இட்லி துண்டுகள் சர்க்கரை இரண்டையும் கலந்து பிறகு வாணலியில் போட்டு கிளறவும் . சன்ன தீயில் நன்கு கலந்ததும் ஏலக்காய் பொடி போட்டு கிளறி இறக்கவும் . மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு : இட்லிமாவில் உப்பை சிறிது குறைத்து போட்டு, முதல் நாளே கலந்து வைக்கவும். இந்த அளவு நான்கு பேர் சாப்பிடலாம் .
Total Votes: 244
Total Views: 1246