Recipe Name: பிய்யம் பிண்டி ரொட்டை & பிரண்டை தொக்கு
Recipe by: Kalaivani.D
Ingredients:
பிய்யம் பிண்டி ரொட்டை: 1கப் அரிசி மாவு 1 கப் சூடான தண்ணீர் வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு தேவையான எண்ணை பிரண்டை தொக்கு: 250 கிராம் இளசான பிரண்டை 2 வெங்காயம் 2 தக்காளி இஞ்சி சிறு துண்டு புளி சிறிது தனியா தூள் 1 ஸ்பூன் சீரகத் தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் மிளகாய் தூள் 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் அரை ஸ்பூன் உப்பு தேவையானது எண்ணை தேவையானது வெல்லம் சிறிது தாளிக்க தேவையான எண்ணை கடுகு உளுத்தம்பருப்பு. கடலைபருப்பு பெருங்காயத்தூள்
Procedure:
ரொட்டை செய்முறை:
ஒரு கப் அரிசி மாவில் உப்பு ,சீரகம்,தேங்காய் துருவல், கட் செய்த வெங்காயம் ,இஞ்சி,பச்சை மிளகாய் ,கொத்தமல்லி, கறிவேப்பிலை, கலந்து சூடான தண்ணிரை இதில் ஊற்றி பிசைந்து மாவை சிறு சிறு உருண்டை ஆக எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணை தடவி மாவை அதில் வைத்து கையால் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
பிரண்டை தொக்கு செய்முறை :
250 gm பிரண்டையை எடுத்து 4 பக்க ஒரத்தில் இருக்கும் தோலை சீவி எடுத்து விட்டு சிறியதாக கட் செய்து எண்ணையில் வதக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அதே எண்ணையில் 2 பெரிய வெங்காயம்,2 தக்காளி,இஞ்சி சிறிது, புளி கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்கி தனியாதூள் ஒரு ஸ்பூன், சீரகதூள் (1/2) ஸ்பூன், மிளகாய்தூள் 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் அரை ஸ்பூன் போட்டு சுருள வதக்கி உப்பு ,கொஞ்சம் வெல்லம் போட்டு இறக்கி ஆறியதும் அரைத்து கொள்ளவும்.
அதில் கடுகு உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு , பெருங்காயத்தூள் தாளித்து
பிரண்டை தொக்கில் ஊற்றவும்.
---------------------------------
பிரண்டையை வஜ்ஜிர வல்லி என்று அழைப்பர் . இதய நோய் ,ரத்த அழுத்தம் ,பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி ,இடுப்பு வலி etc.. நீங்கும்.
பிரண்டை எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது.
Total Votes: 95
Total Views: 940