Recipe Name: இனிப்பு மற்றும் காரப் பிட்டு கொளுக்கட்டை
Recipe by: K. Hemalatha
Ingredients:
கடலைப் பருப்பு – ஒரு கப், பாசிப்பருப்பு – ஒரு கப்
Procedure:
பிட்டு செய்முறை:
கடலைப் பருப்பு – ஒரு கப்
பாசிப்பருப்பு – ஒரு கப்
இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊரவைக்கவும். பின்னர் அதனை தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். அதனை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து உதிர்த்து விடவும். பிட்டு ரெடி
காரப்பிட்டு செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை, உப்பு போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் ஏற்கனவே வேகவைத்திருந்த பிட்டை அதனுள் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் சிறிது புளி தண்ணீர் சேர்த்து வதக்கிய பின் இறக்கவும். காரப்பிட்டு ரெடி.
இனிப்பு பிட்டு செய்முறை:
ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் சேர்த்து முந்திரி போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் அதில் பிட்டை சேர்க்கவும். அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக சுடானதும் இறக்கிவிடவும். இனிப்பு பிட்டு ரெடி.
கொளுக்கட்டை செய்முறை:
ஒரு தவாவில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதில் ஒரு டம்பளர் பச்சரிசி மாவு சேர்க்கவும். பின் அதில் ஒரு கரண்டியின் பின்புறத்தை உள்ளே வைத்து மூடி விடவும்.5 நிமிடம் வேக வைக்கவும், பின்னர் அதை இறக்கி நன்றாக கலக்கிவிடவும். பின்னர் அதில் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதனை சிறிது உருண்டை செய்து குழியிட்டு பிட்டை உள்ளே வைத்து மூடிக்கொள்ளவும். அதனை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்தால் சுவையான இனிப்பு மற்றும் காரப்பிட்டு கொளுக்கட்டை ரெடி.
Total Votes: 59
Total Views: 769